விட்டில் பூச்சிகள்....!

அவள் உதடுகள்
சிரித்துக்கொண்டேயிருகின்றன
வெளிச்சத்தில்
மட்டுமல்ல இருட்டிலும் ....

விளக்கை சுற்றி
வாலிப விட்டில் பூச்சிகள்
வழுக்கி விழுவது தெரியாமல்
காணாமல் போகிறது பர்சுகள் ....!

அம்மாவசை இருட்டிலும்
பசையுள்ளவர்களுக்கு
மட்டுமே வலை வீசி
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் ....!

பத்தினியின் பாசமும்
தற்கொலை செய்து கொள்கிறது
பகட்டுக்காரிகளின்
புன்னகையின் முன்பு ...!

இருட்டு தேசத்தில்
வாலிப கொடிகள்
பாரியின் தேர் இருக்க
எங்கெங்கோ படர்கிறது ....!

குறைகளை அறிய
மாதவிகளிடம் பாடம் கற்க
துணிவில்லா கண்ணகிகள் ....!

எரிப்பதற்கு
எதுவுமில்லாததால்
தாங்களே இங்கு எரிகிறார்கள் ....!

விடை கிடைக்கா
கேள்விகளை சுமந்துகொண்டு
நான்கு சுவற்றுக்குள்
வட்டமடிக்கும்
நவீன கண்ணகிகள்
அழுவதும் சிரிப்பதும்
தொலைக்காட்சி பெட்டி முன்பு தானே ...!

எழுதியவர் : வெற்றிநாயகன் (12-Sep-12, 10:11 pm)
பார்வை : 359

மேலே