காதல்
நீ பார்த்த நொடிகள் போதும் என
நினைத்திருந்தேன்
நீ அணைத்த ஸ்பரிசம் போதுமென
நினைத்திருந்தேன்
உன் முதல் முத்தம் போதுமென
நினைத்திருந்தேன்
நீ தந்த வாரிசு போதுமென
நினைத்திருந்தேன்
உன் நினைவுகளின் நினைவுகளே போதுமென
நினைத்திருந்தேன்
இவை அனைத்தையும் நான் நினைத்திருக்க
நீ மட்டும் ஏன் என்னை உன் நினைவிலிருந்து நீக்கிவிட்டாய் ?