என் வீட்டு நாய்க்குட்டி,,

என் வருகையின் புரிதலை மோப்பம் பிடித்து

கால்பற்றி,தோள்பற்றி...என்னை தடுமாறி

தள்ளாட வைக்கும் அதன் அன்பிற்கு அடிமை நான்...

விதவிதமாய் ஒலியெழுப்பும் உறுமல் கூட என்னை வெறுப்பேற்றவில்லை...

மாறாக ரசிக்க முற்படுகிறேன்...

அணிலையும். காக்கையும் ஒரு சேர அது விரட்டி இயலாமல் போனதை தெரிவிக்கும்...

வருத்த ஒலியோடு...

விருந்தினரை இடைமறித்து விரயக்குரல் எழுப்பும் வேளை... என் ஒற்றைவார்த்தை

மந்திரமாய் உள்ளே போ என்க?

குலவும் ஒரு ராகத்தினில் காதை குவித்த ஒலியோடு...

தாள்வாய் கண்மூடி தரையுறங்கும் வேளைகளில்

பெயரை சொல்லி நான் அழைக்க தலைநிமிர்ந்து வாலாட்டி..சின்னக்கண் அகலமாக்கி அன்பு நவில

மோனமொளியாய் அது பார்க்கும் பார்வையில் கவிழ்கிறேன் நான்...

எனதருமை நாய்க்குட்டியே...

எழுதியவர் : காளிதாசன்... (18-Sep-12, 7:16 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 179

மேலே