கவிதை கவிதை

கவிதையில்
காதல் கவிதை ..
வாழ்க்கை கவிதை ..
ஹைக்கூ கவிதை ..
நண்பர்கள் கவிதை ..
சமுதாய கவிதை ..
கண்ணீர் கவிதை ..
என பல உண்டு ..

காதல் கவிதை..

காதலில்
உறைந்து, உருகி,
தொலைந்து, வீழ்ந்து
மறந்து, மடிந்து எழுதியவை ..

வாழ்க்கை கவிதை...

வாழ்க்கையில்
வாழ்ந்து உணர்ந்து
தடுமாறி உருமாறி எழுதியவை...

ஹைக்கூ கவிதை

காதலில் வீழ்ந்து,
வாழ்கையில் தோற்று
சுருக்கு போட்டு கொள்பவர்கள் போல
சுருக்கி கொள்பவை..

சமுதாய கவிதை ..

சமுதாயத்தில்
பண்பாடுகளையும் அன்றாடும்
படும் பாடுகளையும் பற்றி சுமப்பவை ..

கண்ணீர் கவிதை..

மையால் எழுதாமல்
கண்ணீரால் எழுத படுபவை...

இப்படி
அனுபவித்து எழுதும்
அனைத்தும்
அங்கீகரிக்க படுகிறதோ இல்லையோ
அவமானபடுகிறது..

நீ
எழுதியவையா இது..
எங்கிருந்து சுட்டாய்..
என பல வசைகள்..

கவிதை
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதமான
உணர்வை
முன் நிறுத்துகிறது
அனுபவங்கள் பகிர்கிறது

கவிதை ஒன்றை
எழுதி பிரசுரித்தால்
கவிதை கண்டதும்
பார்த்து படித்து
கடந்து போகிறார்கள்..

கவிதை எழுதுவது
கவிதை
கவிதையாய் இருக்கிறது
என சொல்வதற்காக அல்ல ..

கவியால்
என்(பிறர்) கதை
பின்னப்பட்டு இருக்கிறது
சொல்லப்பட்டு இருக்கிறது
என பொருள் ..

எழுதியவர் : அடியேன் (18-Sep-12, 11:44 pm)
சேர்த்தது : hariharapradap
Tanglish : kavithai kavithai
பார்வை : 216

மேலே