வேண்டும் வேண்டும்

நேற்றுப் பிறந்த
குழந்தைபோல
நெஞ்சம் துள்ளுதே
ஆனந்தமாய்
காற்றில் பறக்கும்
பறவை போல
உள்ளம் துள்ளுதே
உற்சாகமாய்
வேண்டும் வேண்டும்
மீண்டும் இந்த
ஆனந்தம்தான்
மீண்டும் மீண்டும்
வேண்டும் இந்த
உற்சாகம்தான்
வானம்போலே
உயர்ந்து நின்றால்
வாழ்க்கை உனக்கு
வசந்தம் ஆகும்
உள்ளம் உனக்கு
உறுதியாய் இருந்தால்
உலகின் துன்பம்
பனிபோல் நீங்கும்
எதையும் துணிந்து
எதிர்த்துப் போராடு...!
இனிமை நிறைந்த
பாடல்கள் பாடு...!