மழை!

சந்திக்கும் நேரங்களில்
நான்
சுமந்து வந்தேன்
ஒரு குடை !

சிறுமழை தூறல்
பிடிக்குமென்றாய்
என் குடையில்
வரமறுத்தாய் ..!

வலியுடன் காத்திருந்தேன்
கனமழைக்கு ..!
கானலாய் போனது
என் கனவு !!

உன் தோல் சாய்ந்து
கதை சொல்ல
கடவுள் கூட
சம்மதிக்கவில்லை !

நீ இல்லாமலே
மழையில் உன் நினைவுகளை
தாங்கி
தனிமையில் தனியாய்
கண்ணீருடன் !

தாஸ்

எழுதியவர் : Thas (23-Sep-12, 9:35 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 204

மேலே