சீர்திருத்த பள்ளி
குதூகலமாய் பள்ளிக்கு போகும் வயதிலே என்னை கூலி வேலைக்கு அனுப்பினால் என் தாய்..!
தினம் தினம் குடித்துவிட்டு வீடு வரும் என் தந்தையிடம் அடிவாங்கி அடிவாங்கி மறுத்து போனது என் இதயம்..!
ஏன் பிறந்தேன்!
ஏன் பிறந்தேன்.!
இந்த பாவமான உலகத்தில் ஏன் பிறந்தேன்.!
இதனால் தானோ நான் பாதகம் செய்தேன்.!
பாதகம் செய்தேன்.!
படிக்கும் வயதில் பாவங்கள் பல செய்தேன்.!
தாயின் தவறான நடத்தையை கண்டு தாயை கொன்றேன்.?
தந்தை தரும் தொல்லைகளை தாங்க முடியாமல் தந்தையை கொன்றேன்.?
பாதகம் செய்தேன்.!
பாதகம் செய்தேன்.!
இந்த பாவங்கள் பல செய்யும் உலகத்தில் பிறந்து நானும் பாவங்கள் செய்தேன்.!
இன்று நானும் பள்ளிக்கு போகின்றேன்..
பாசத்துக்காக ஏங்கி தவிக்கின்றேன்..
செய்த தவறுகளை நினைத்து இன்று கண்ணீர் வடிக்கின்றேன்..
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டா கொஞ்சம் சொல்லுங்கள் - *+*சீர்திருத்த பள்ளியில் இருந்து ஒரு அழுகுரல்*+*