புதியதோர் பாரதம் படைப்போம்!புதியதோர் பாரதம் படைப்போம்!
இளைஞனே!துயில் எழு!
கைகளுக்கு எழுத கற்றுக் கொடு!
கால்களுக்கு நடக்கச் சொல்லிக் கொடு!
உனக்கு நம்பிக்கை கொடு!
நம்பிக்கை நீ மட்டும் தான்
என்ற தன்னம்பிக்கை கொடு!தைரியம் கொடு!விழுந்து விட்டு ஏன் யோசிக்கின்றாய்?
விழுந்ததே எழுவதர்க்குத்தான்
என்பதை மறந்து விடாதே?
விழுந்தவன் எழுவதில் தவறில்லை.
எழுவதற்க்காக விழுவதும் தவறில்லை.
வாழ்வதற்காக விழுவதும்,,
எழுவதும் தவறேயில்லை.
தன்னம்பிக்கை,தைரியம் இரு கண்கள்
என்பதை மறந்து விடாதே?
சாதி,சமயம் எனும் சாக்கடைகள் நமக்கு எதற்கு?
சாதி,சமயம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,என்ற பாகுபாடுகள் நமக்கு எதற்கு?
இறந்தும் வாழும் நடை பிணங்களான
சாதி,சமயம் நமக்கு எதற்கு?
சமுதாயத்தில் சாதி,சமயம்
எனும் களைகளை கண்டறிய வேண்டாமா?
சாதி,சமய களைகளை கண்டறிந்து வேரோடு களைவது நமது கடமை அல்லவா?
"நாட்டிற்குள் சாதிப் போர் வேண்டாம்
நாட்டிற்காக சாதிப்போர் வேண்டும்"
எனும் கூற்றுப்படி வாழ வேண்டாமா?
நீ மண்ணில் வீழ்வதர்க்காக பிறந்தவன் அல்ல...
மண்ணில் பிறரை வாழவைப்பதற்காக
பிறந்தவன் நீயல்லவா?
"நீயின்றி அமையாது உலகு.
நீரின்றி அமையாது உலகு"
என்ற கூற்றுகளை பொய்யாக்கி
இளைஞனே நீயின்றி அமையாது இவ்வுலகு
என மாற்றுவது நம் பாரத கடமை அல்லவா?
நீ,நீயாக இருப்பதை விட,
நாம் என்று நாம் மாறி,ஒற்றுமையோடு போராடு!இல்லையேல் மண்ணோடு மடிந்துவிடு...
பாரதத்தால் நீ வாழ்ந்தாய் என்பதை விட,
உன்னால் பாரதம் வளர்ந்தது என்ற ஒரு
புது சரித்திரம் உன்னால் பிறக்கட்டும்...
வாழ்க பாரதம்...வளரட்டும்
நமது சேவை பாரத மக்களுக்காக...
புறப்படு இளைஞனே புதியதோர் பாரதம் படைக்க....