செஞ்சோற்றுக் கடன் அல்ல..!

பசி பஞ்சம்
பிணி
எங்கு இருக்கிறது..?
எங்கும் எல்லாம் நிறைந்திருக்கிறது

அவரவர் ஊழ் வினையாகக் கூட இருக்கலாம்
உன் குடும்பத்தினர்
இல்லையேல் உன் முதாதையர்
பழி பாவங்களில் பங்கெடுத்து இருக்கலாம்

இல்லையென்றால் நீ ஏன்
கொடுந் துயரங்களை சுமக்க வேண்டும்
சுகமான நித்திரையை புறந்தள்ள வேண்டும்
தனிமை முழுதும் துக்க விசயங்களில்

நீண்டு கொண்டே போகின்றன
விடை தெரியாத புதிர்களில்
கிளி பேசும் மொழி கூட
புரியவில்லை உனக்கு

ரேகை பார்க்கும் பொழுதுகளில் கூட
உன் உள்ளங்கைகளில் அங்கும் இங்குமாக
கோடுகள் அழிந்தும் மறைந்தும் உள்ளன

ஏடுகள் தான் பார்க்க வேண்டும்
எனக்கு என்னமோ
சிறு ஒளிக்கீற்று கூட தெரியவில்லை
என்ன செய்யலாம் நண்பனே

முதலில் இருந்து வருவோம்
முதல் சொன்ன இரண்டு வரி
உனக்கு எப்படி பொருந்துகிறது தோழனே..!

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Oct-12, 11:24 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 152

மேலே