அ முதல் ஆயுதம் வரை...

அ ன்பில்லாதார் உறவு ஆனந்தமில்லாதது.

ஆ சைகளை அடக்கி ஆள்பவன் அறிஞன்.

இ ன்பம் இருபாலருக்கும் பொதுவானது.

ஈ டில்லா பாசம் தாய்ப்பாசம் மட்டுமே.

உ றவுகளை பேணாதவன் அனாதையாவான்.

ஊ ர்க்கூடி விழா எடுத்தால் ஒற்றுமை ஓங்கும்.

எ ங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்.

ஏ ற்றி விட்ட ஏணியை எட்டி உதையாதே.

ஐ யம் உன் எதிரிக்கு சாதகமாகிவிடும்.

ஒ ப்பற்ற ஞானிக்கும் உயிர் பிரியும் நேரமுண்டு.

ஓ லைக்குடிசையும் ஒருநாள் உயர்வடையும்.

ஔ தாரியம் மிக்கவன் போற்றபடுவான்.

ஃ கன்னாவை அறியாத தமிழனுண்டோ?

எழுதியவர் : அந்தோணி முத்து (4-Oct-12, 10:17 pm)
பார்வை : 456

மேலே