Yennada Ulagam

ஐந்து வீட்டுக்கு ஒரு முற்றம்
அது ஒரு காலத்தில்...
ஐம்பது வீட்டுக்கு ஒரு முற்றம்
நாம் வாழும் காலத்தில்...

அனுதின ஆரவார நடைபயணம்
அது ஒரு காலத்தில்...
அனுதின கட்டாய நடைபயணம்
நாம் வாழும் காலத்தில்...

கேழ்வரகுடன் அரிசியும் தினையும்
அது ஒரு காலத்தில்..
காடைகண்ணியுடன்(oats ) ரொட்டியும்
நாம் வாழும் காலத்தில்...

மிதிவண்டி மகிழ்ச்சி பயணம்
அது ஒரு காலத்தில்...
மோட்டார்வாகன புழுதி பயணம்
நாம் வாழும் காலத்தில்...

உறவுகளுடன் கூட்டுக்குடும்பம்
அது ஒரு காலத்தில்...
கணவன் மனைவியே தனிக்குடும்பம்
நாம் வாழும் காலத்தில்...

குதூகலம் கொண்டாட்டம்
அது ஒரு காலத்தில்...
கொலையும் கொள்ளையும்
நாம் வாழும் காலத்தில்...

அன்பும் அரவணைப்பும்
அது ஒரு காலத்தில்...
கற்பழிப்பும் கள்ளத்தனமும்
நாம் வாழும் காலத்தில்...

இயற்கை காற்றும், மழையும்
அது ஒரு காலத்தில்...
செயற்கை சூழலும், மனிதரும்
நாம் வாழும் காலத்தில்...

சொர்க்கம் பூமியிலிருந்தது
அது ஒரு காலத்தில்...
நரகம் பூமியிலிருக்கிறது
நாம் வாழும் காலத்தில்...

எழுதியவர் : சுபா பூமணி (6-Oct-12, 11:10 am)
பார்வை : 169

மேலே