என் தாய்

என் வலியினை நீ உணர்ந்தாய்
என் ஏக்கங்களை நிறைவேற்றினாய்
எனக்கு ஊட்டி நீ பசியாற்றிக்கொண்டாய்
துன்பத்தில் நானிருந்தால் எனைதேற்றினாய்
வெற்றி பெற்றால் பரிசாக முத்தங்கள் தந்தாய்
என் அன்னை உனக்காக வெற்றிபெறுவேன்
முத்தங்களை தினம் பரிசாக பெறுவேன்
உன் திருவடிகளை நான் தாங்க வேண்டும்
உன் மடிமீது தலைவைத்து தூங்கவேண்டும்
எனக்காக வாழும் என் தாய் உன்னை
இதயத்தில் வைக்கமுடியவில்லை-அதனால்
உன்னை என் இதயமாக வைத்திருக்கிறேன்.
என்றும் உன் பிள்ளையாய்.

எழுதியவர் : சிவா(எ)விஜய் (6-Oct-12, 6:18 pm)
சேர்த்தது : Siva K Gopal
Tanglish : en thaay
பார்வை : 220

மேலே