அகதிகளின் அடி வயிறு நெருப்பு

துரத்தி அடிக்கப் பட்டே - அன்பின்
துணை தேடி வந்தோம்

இளமை இடித்து துடிக்க - இதயம்
வலிக்க மிருகம் கண்டோம்

வலிகள் வெளியில் புரியாது - தேக
வளைவினில் ரசனை ருசித்தே

பாலை சுற்றி வரும் பூனையென
பருவம் சிதைக்கும் பேயென உடல்கள் கண்டோம்

விற்கப் பட்டே மனிதரால்
விலைமகள் ஆக்கப் பட்டோம்....

ரத்தங்கள் கொதித்த போதும்
ரகசியமாய் பருவம் விற்றோம்......

பசிக் கொடுமை தீரவில்லை
பாரில் உதவ யாருமில்லை.....

விரட்டுகிறது வீதி எல்லாம்......
வீழ்ந்து விட்டோம் மல்லாந்து.....

சின்னாபின்னமாக்கியே சிரிக்கிறது உலகம்
சிந்தனை மயங்கியே எம்மீது கவிந்து.........!

எழுதியவர் : (10-Oct-12, 10:42 pm)
பார்வை : 171

மேலே