இன்னொரு நான்...

ஒழுக்கத்தை பற்றி
பேசுகிறேன்.
நான்...
ஒன்பது வப்பாட்டிக்கு
சொந்தக்காரன்...

புகைப்பது தவறென்று
புகழாரம் சூடுகிறேன்
நான்
பிடித்த பீடி
இன்னும் அணையாமல்
புகைந்து கொண்டுருக்கிறது...

மது மயக்கம்
கூடாதென்று மேடையில்
கூறிவிட்டு...
இறங்கும் போது
தவறி விழுகிறேன்
அதிக போதையால்...

கொத்தடிமை
கூடாதென்கிறேன்.
என் மனைவி
வீட்டில் இருப்பதை
மறந்து விட்டு...

பெற்றோர் கூட
இருப்பது பெருமை
என்கிறேன்...
என் அப்பா இருக்கும்
முதியோர் இல்ல விழாவில்...

எழுதியவர் : சிவானந்தம் (15-Oct-12, 5:25 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : innoru naan
பார்வை : 144

மேலே