மீண்டும் பிறக்க ஆசை
நலம் செய்யும் உறவில்
நன்மை எதிர்பாராமல்
நாளும் செயற்கை கோளாய்
நட்பு வட்டத்தில்
இயற்கையாய் சுழன்று
பொழுதெல்லாம்
புன்னகை தூவி
இன்பம் தந்து துன்பம் பகிர்ந்து
சுமக்கிறாய் என் சுக துக்கங்களை
நண்பன் என்னும் பெயர் சொல்லி
மறு ஒரு பிறவி வேண்டாம்
என்று இருந்த நான்
மீண்டும் பிறக்க விளைகிறேன்
நண்பனாக நீ மீண்டும்
கிடப்பாய் என்றால்