thazhmai

தாழ்மை

நான் உன்னால்
தாழ்த்தப்பட்டவன்,
நான் என்பதில்
நீயும் இருக்கிறாய்,
நீயின்றி
நான் எவ்வாறு
நானாவேன்?
நீயும் நானும் ஒன்றுதான்
என் தாழ்மையிலேயே,
உன் உயர்வு இருக்கிறது.
உன்னை உயர்த்த
உறுதுணையாய்
இருக்கும் பட்சத்தில்
நான் எவ்வாறு
தாழலானேன்?
இருந்தும் பரவாயில்லை
தாழ்மையாய் கூறுகிறேன்,
உன் உயர்வு எனக்கும்,
நமக்கும் பெருமையே!
ஆனால், சொல் மானிடா!
என்னை தாழ்த்துவதுதான்
உன் உயரிய பண்போ...?

எழுதியவர் : asura (25-Oct-12, 5:55 pm)
சேர்த்தது : asura
பார்வை : 182

மேலே