##### இரவினில் மீட்டிய கீதம் #####

பகல் ஒன்று
என்னைக்கடந்து
எங்கேயோ செல்லும்
எந்நாளும் இதேநிலை
இரவு ஒன்று
என்னைத் தேடியே
எப்போதும் பின்தொடரும்
எனக்கிது யோகநிலை
சொந்தம் என்று
நான் தேடியதென்னவோ
எனக்குள் ஒளிந்திருக்கும்
உன்னை மட்டுமே
இந்த இரவில்
ஆறுதல் சொல்லி
அரவணைக்க நினைப்பது
வான் கொண்ட நிலவு
கண்கள் கொண்ட
கனவுகள் அனைத்தும்
கணக்கற்றதெனப் புரிய
விண்மீன்களின் பரவல்
யாவரும் அறியாத
யாகம் ஒன்று அன்புக்காக
புதையுண்ட வலிகளால்
பொறுப்பேற்கப்பட்டு நடக்கும்
தனிமை என்பதை
தாள் இட்டுக் கொள்ளாது
தாழ்பணிந்து நிற்கிறேன்
நிசப்த கீதத்தின் முன்னால்
வழி இல்லாமல்
தவிக்கும் பாவையல்ல
தொலைந்த விதிகளைப்
புதுப்பிக்கும் சாவித்திரி
சத்தியவான் எங்கே
சத்தமிட்டுக் கேட்கிறது
சர்வ வல்லமையும் கூட
பூர்வ ஜென்ம நினைவுகள்..!!!