ஓம் முருகா!!!

சந்தனமும், சவ்வாதும் கமழ்ந்து வரும் வேளையிலே; காட்சி தந்து அருளுகிறான் ஆறுபடை வீட்டினிலே!!!

திக்கற்றுத் திரிவோரை தித்திக்கச் செய்திடுவான் திருக்குமரன்!!!
கருணை குணம் கொண்டோரைக் கரம் நீட்டிப் பிடித்திடுவான் கருணாகரன்!!!

பன்னீரின் மணம் கொண்டு கண்ணீரும் மணக்குதடா!!!
துரத்தி வரும் துன்பமெல்லாம் துடி துடித்துப் பறக்குதடா!!!

பாவமென்ற நோய், நொடிகள் படையெடுத்து வருகையிலே; பற்றிக் கொண்டு எரியுதடி அவன் திருவடியைப் பணிகையிலே!!!

விளைவித்த வினைகளுக்கு விடைத் தருவான் வடிவேலன்!!!
காலம் கொஞ்சம் காத்திருந்தால் காட்சி தருவான் கதிர்வேலன்!!!

ஓம் என்ற ஒரு வார்த்தை உலகெங்கும் ஒலிக்குதடி!!!
ஓம் என்று ஒலிக்கையிலே கனவெல்லாம் பளிக்குதடி!!!

எழுதியவர் : கார்த்திக்... (31-Oct-12, 11:21 am)
பார்வை : 304

மேலே