தனிமரம்
பாலை வான மழைத்துளியைப் போல நான் எனக்கு மட்டுமே துணை நின்றேன் !
காற்றிலா இடத்தில் உள்ள கண்களைப் போல கலங்கினேன் !
தூரத்தில் செல்வங்களின் அடி-உதை விளையாட்டினையும், மங்கையின் குடிநீர் பானைகளையும் கண்டு ரசித்தேன் !
காற்றின் கலவையாக இருந்த என்னை
கரியமில வாயுவாக
தனியே நின்றேன்
யார் விட்ட சாபமோ ?
எந்தன் நிழலை அனுபவிக்க வரம் கிடைக்காத மனிதர்களுக்கு வரம் கிடைக்க (அருமை விளங்க )
வேண்டுகிறேன் !
என்றோ ஒரு நாள் சரகுந்தும், ஒரு நேரம் பயணிகளின் வண்டியையும்
சிலரை சுமந்து செல்லும் !
யாரோ ஒருவர் செய்த நன்மையினால் விளைந்த நான் அவருக்கு அடிபணிய விரும்பி காத்திருக்கிறேன் !
தொடுவானத்தில் மற்றொரு ஜீவனும் இதை தான் பேசுமோ!
எத்தனையோ அன்பு தாண்டிய ஜோடிகளின் மரண வாயிலை நானே திறந்து வைத்திருக்கிறேன் !
குழந்தை களின் மகிழ்ச்சியை அள்ளித்தந்த எனக்கு ஏன் மேற்கூறிய ஒன்றை நிறுத்த முடியவில்லை !
எண்ணிலங்கா பறவை மழலைகளுக்கு இடம் அளித்த நான்
கண்டு ரசித்த காதல் என்னவோ
பச்சைக் கிளிகளின் காதலையும்,
பஞ்ச வர்ண கிளிகளின் காதலையும் தான்!