இரவின் மடியில்!!

இரவின் மடியில்
கண்களை தந்துவிட்டு
ஊரே உறங்குது!
கனவுகளை சுமந்து
உறங்க மறுக்கும்
விழிகளுக்கு என்னசொல்ல...
நாளை விடியுமென்றா?
பகலின் அலைச்சலில்
உடம்பு களைத்து
நாடே தூங்குது!
நல்லது நடக்காதாவென
கொட்டகொட்ட விழித்திருக்கும்
கண்களுக்கு என்னசொல்ல...
நமக்கும் விடியுமென்றா?
இரவை தேடிபிடித்து
உறக்கத்தின் கையில்கொடுத்து
உலகே சப்தமற்றிருக்குது
தேடியதேடல் கிடைக்காதாவென
ஏக்கமோடு காத்திருக்கும்
உள்ளத்திற்கு என்னசொல்ல...
தேடியது கிடைக்குமென்றா?
பகலை விரட்டிவிட்டு
இரவை அணைத்துக்கொண்டு
எல்லோரும் உறங்கியிருக்க
பாவிநெஞ்சம் பரிதவிக்குது
நானுனக்கு என்னசொல்ல...
உறக்கம் விற்று
உயர்வுக்கு வழிசெய்யென்றா?