உலகம்
இல்லாததை இருக்கென்று வாதிட்டு
இருப்பதை உணர மறுக்கிறது இவ்வுலகம்
சரியென்று தெரிந்தும் - இல்லை
பிழையென்று வாதிடுகின்றது இவ்வுலகம்
நல்லவர்கள் போல் நடிக்கும் கேட்டவர்களை
புகழின் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது இவ்வுலகம்
இது தான் உண்மை என்று தெரிந்தும்
பொய்க்கு மட்டும் துணைபோகிறது இவ்வுலகம்
இருப்பவன் சொன்னால் ஆகா ஓகோ என்கிறது
அதையே இல்லாதவன் சொன்னால் அடச்சீ என்கிறது
ஒருவேளை கலியுகம் என்று தேற்றிகொண்டலும்
பலவேளைகளில் குமுறுகிறது இவ்விள நெஞ்சம்..!!