மர்மமான அழைப்பு
யார் ஆரம்பித்தது
இந்த சுனாமியை?
இன்று வரை
உணர்வு அலைகள்
மனதின் விளிம்பக்
கரையைத் தாண்டி
இவ்வளவு பலமாக
அடித்ததில்லை.
யாரைத் தேடப் புறப்பட
தட்டுகின்றன என் உணர்வுகள்
பித்துப் பைத்தியமாக
இதயத்தின் கதவுகளை
உடைத்துவிடும் வெறியுடன்?
எத்திசை போகத் துடிக்கின்றன?
யாரைப் பார்க்க?
என்னமோ
எனக்குத்தெரியாத அழைப்பொன்று
அவற்றுக்குக் கிடைத்துள்ளது.