தீபத்த ஏற்றிட வா!
நாட்டுக்கு நல்லது நடக்கலியே
நரகாசுரன் அழியலயே
மாறுவேசத்துல அலையுறாண்டா
தாடி வச்சுத் திரியுறாண்டா
தண்டச்சோறு திங்குறாண்டா
முக்காட்டுக்குள்ள முகத்த மறைத்த
குடும்பத்தோடு திங்குறாண்டா
மத வெறிய தூண்டி விட்டு
மாயாஜாலம் செய்யுறாண்டா
அந்நியன கூப்பிட்டு
பல்லக்குல அமர வச்சி
பல்லக்கு சுமக்குறாண்டா
பக்குவமா பேசுறாண்டா
பாசாங்கு செய்யுறாண்டா
காப்பார் கடவுளுன்னு
கதையெல்லா சொல்லுறான்டா
ஆட்சில உள்ளவுக
ஏழைகள கொடுமைப்படுத்தினா
அவுக அழுத கண்ணீர்
ஆட்சிய அழிச்சிடும்னு
வள்ளுவன கூப்பிடுங்க
வக்கணையா சொல்லுவாக
கனிம வளத்தயெல்லா
கவர்ச்சி மொழி பேசி விக்குறாண்டா
காட்டு வளத்தையெல்லா
கடைச்சரக்கா ஆக்கிட்டாண்டா
பணமுதலைகள பாதுகாக்க
மக்களை அழிக்குறாண்டா
பகாசுர கம்பெனிக்கு
பாரம் சுமக்குறாண்டா
விண்ணை உடைக்கும் விலைவாசி
மக்களை வீதியில் நிறுத்தும் போது
சில்லர வர்த்தகத்த சீரழிக்க பார்க்கிறாண்டா
மதுர மீனாட்சிய கூப்பிடு
மாசை துடைப்பதற்கு
பெண்கள கூப்பிடு
பேயை விரட்டுவதற்கு
எரிமலையைக் கூப்பிடுங்க
மக்கள் எழுச்சி பெறுவதற்கு
கோடை இடியை கூப்பிடுங்க
கொள்கை முழக்கம் செய்வதற்கு
விவசாயி முதுகெலும்ப
வீதியில வச்சி முறிக்குறாண்டா
நாடு முழுவதும் விவசாயி
தற்கொல செய்யுறாண்டா
காப்பீட்டு துறையையெல்லா
காசாக்கப் பார்க்குறாண்டா
ஏசுவையும் நபியையும் நல்லாவே அழைச்சுடு
புத்தனையும் கூப்பிடு
பொங்கி எழுவதற்கு
காந்திய கூப்பிடு
காயமற்ற சுதந்திரம்
கண்ணில்லா உடம்பென்று சொல்வதற்கு
பாவத்த அழிப்பதற்கு
பாவிய அழிச்சுடணும்
தீபத்த ஏற்றிடணும்
தீபாவளின்னு சொல்லிடனும்