என்னைப் பற்றி………. பகுதி 8

நான் ஒரு ரசிகை!
எழுத்துலகை
பூந்தோட்டமாய் எண்ணி
நடை பயில வந்த சிலரை
சந்தித்ததை பற்றிய
முகவரிகள் கொண்ட
என் முகவுரைகள்,
என்
முந்தைய தொடர்களில்….

என் பார்வைப் பிழையை
சரி செய்த பின்
இதை
பிரபஞ்சமாக உணர்ந்து
பயணத்தை தொடர்ந்த
நான்

பிரபஞ்சத்தில் உள்ள
தகவல் தொடர்பு
விதி முறிகளை
அறிந்தே வைத்துள்ளேன்.

ஆம்!
வெகு தொலைவில்
இருந்து வரும்
பார்வை குவிப்புகளில்
சங்கேதங்கள், சமிஞைகள்
என் மீது பட்டு
திரும்பப் பெறுபவருக்கு
சென்றடையவும்

விரும்பி பெறுபவர்
அவற்றைப்
புரிந்து கொள்ளவும்

சற்றே அவகாசம்
தேவைப்படும்.
என்பதை நான்
நன்கு அறிவேன்.

பார்வைக் குவிப்பு
என்மீது
செய்யப்படும் போது
நான் ஆராய்ச்சிக்கு
உட்படுத்தப் படுவது
எனக்கு-
என் புரிதலுக்கு,
இடையூறாக
நான் எண்ணுவதில்லை!

சற்று நேரம்
நான் அசையாமல்
இருக்க வேண்டிய
நிர்பந்தங்கள் எனக்கு
நன்கு புரியும்.

எனது இயக்கம்
சற்றே நிறுத்தப்படுவது
என் சுதந்திரத்திற்கு
தடை என நான்
கருதுவதில்லை!

சங்கேத சமிஞைகள்
கொசுவின் ரீங்காரத்திலும்
பெறப்படும் என்பதால்
நான் அவற்றையும்
அடிப்பதில்லை….


என்னில் இருந்து
திரும்பப் பெறப்படும்
சமிஞைகளின்
ஆராய்ச்சிகள்
புதிய பரிணாமங்களுக்கு
வித்திடும் எனில்
அதில்
எனக்கு மகிழ்ச்சியே.

என்மீது பார்வை குவியல்

எனக்கு இதில்
மகிழ்ச்சியே--
அது ஆராய்ச்சிக்கு
உடபடும் பட்சத்திலும் கூட!

இந்த பிரபஞ்சத்து
பயணத்தில்
நான் காணும்
காட்சிகளின்
படத் தொகுப்புகளைக்
காண
சற்றே பொறுமை
அவசியம்.

அது இல்லாதவர்கள்
என்னுடன் சேர்ந்தே
பயணம் செய்ய
துணிவு கொள்ளலாம்
எனது
இந்த தொடரில்…..

எனது பார்வை
மாற்றத்தின்
உயிரோட்டத்தில்
இந்த படைப்புகளின்
அதிசயத்தை
உடனுக்குடன் காண
அதுவே
சிறந்த வழி!


என் பார்வை இன்னும் விரியுமா……..


பார்க்கலாம் இனிவரும் தொடர்களில்….



இன்னும் சொல்வேன்

என் பெயர் மங்காத்தா.

எழுதியவர் : மங்காத்தா (19-Nov-12, 6:23 am)
பார்வை : 209

மேலே