சின்ன...சின்ன...விஷயங்கள்....
இலைச் சொட்டு நீர் எனதான் ...
விழுந்தாய் நீ என் மனதில்.
எப்படியோ....
சகதியாகிவிட்டது எனது களம்.
மெல்ல...மெல்ல...
எனக்கு நானே பகையாகிறேன்.
இரவிலும் என்னைத் தொலைத்தபடி....
நீ நிஜமாகிக் கொண்டிருக்கிறாய்...
நான் கனவுகளாகிக் கொண்டிருக்கிறேன்...
தினந்தோறும்.
****************************************************
நிலவு போல்....
சோறூட்டத் தெரியவில்லை...
சூரியனுக்கு.
குழந்தைகளும்...
கைவீசி அழைப்பதில்லை...
சூரியனை.
**********************************************
ஆயிரம் கடவுள்....
ஆயிரம் முகம்....
என் கடவுளுக்கு என்ன முகம்?...
***************************************************
இலை நுனி...
பனித்துளி....
யாருக்குத் தெரியும்....
இரவின் கண்ணீர்த் துளி?..
********************************************
குதிரையில் அய்யனார்...
எல்லையைக் காக்கிறார்..
இம்மியும் நகராமல்.
*******************************************