சின்ன சின்ன ஆசைகள்
பட படவென
இரண்டு கைகளை விரிக்கும்
பள பளக்கும்
பட்டாம் பூச்சிகளின்
வண்ணக் கூட்டத்தில்
ஒளிந்து கொள்ளப்
பிடிக்கும் !
இருமினாலும்
தும்மினாலும்
மழை பெய்தாலும்
ஐஸ் க்ரீம் சாப்பிடப்
பிடிக்கும் !
ஜுரம் வந்தாலும்
குளிரடித்தாலும்
பனியடித்தாலும்
மழையில்
நனைய
பிடிக்கும் !
கொதிக்கும் உலையில்
அரிசியைப் போல
என் கைகள்
அரிசியாக
வெந்துவிடப்
பிடிக்கும் !
வயிறு
சரியில்லை என்றாலும்
பிரியாணி சாப்பிடப்
பிடிக்கும் !
தட்டானைப் பிடித்து
விளையாட
நூலைக் கட்டி இழுத்து
ரயில் விடப்
பிடிக்கும் !
பனிக்கட்டியில்
நடந்தாலும்
சறுக்கில் ஏறினாலும்
அதன் மேல் படுத்து
உறங்கிடப்
பிடிக்கும் !
ஆற்று நீர்
ஓடினாலும் உறங்கினாலும்
அதில் இறங்கிக்
குளித்தாலும்
அதன் மேல் நடந்திடப்
பிடிக்கும் !
இமயமலையில்
ஏறினாலும்
உச்சியிலே நின்றாலும்
அதனை
அணைத்திடப்
பிடிக்கும் !
வானில் பறக்கும்
பறவைகளை
வானில் நின்று
ரசித்தாலும்
அதனை விரல்களால்
எண்ணிவிடப்
பிடிக்கும் !
இத்தனை ஆசைகளும்
என்றுதான் நிறைவேறுமோ !!!