அலங்காரத்தின் குரல் (அங்கத்தின் கூக்குரல்)
இந்தா வாங்கிக்கோ
தண்ணீர் ..
குளிக்கிறது நானில்லை
என் தேகம் (உடல் )!
இந்தா பிடி சோப்பு
விரல் தேய்கிறது
நுரைக்கிறது
அழுக்கெல்லாம்...
குளிக்கிறது நானில்லை
என் தேகம் !
இந்தா பிடி வாங்கிக்கோ
வேட்டி,துண்டு
அப்பாடா!
இது வெறும் ..
ஜடம்
வியாதி
கஷ்டம்
பிடுங்கல்
தொல்லை
எல்லாமும் இந்த
தேகதுக்குதான்
எனக்கு இல்லை .!
வாங்க மாட்டேன்
இனி
நான் ஒரு தொல்லையும் !
இந்தா பூசிக்கோ
விபூதி..
பரமனின்
அம்சம் நான் !
எந்த கஷ்டம்
எந்த ஏக்கம்
என்னை
வாட்டிட முடியும் ?
ஏக்கம்
துன்பம்
எல்லாமும்
என்
தேகத்துக்கு
மட்டுமல்லவா ???
இவை தான்
என் பெருமை !
அது தான்
என் குரல் !!!