"இந்த பொண்ணுங்களே இப்படித்தான் ......"

பலமாதங்களாய் பின்தொடர்ந்து
பலவாராய் பணம் கரைத்து
பணக்காரனாய் பந்தா செய்து
பார்க்கும் போது நகைத்து
மறைவாய் நின்று புகைத்து
துணி விளம்பரம் போல
தினமொரு உடைஅணிந்து
தினுசாய் காரில் வந்து கனவு கண்டு....
சிலுவையில் அறைந்தவனுக்கு சிறகாய்
பட்டினி இருந்தவனுக்கு பால் சோறாய்
மண்வீடு கிட்டாதவனுக்கு மாளிகையாய்
அனாதையாய் அலைந்தவனுக்கு
ஆயிரம் சொந்தமாய்
பொருள் இல்லாதவனுக்கு
புதையலாய் நினைத்த என் காதல்.....
என்னவளின் வார்த்தைகளில் கானலானது ..
"அண்ணா! டைம் என்னாச்சு...??!!"
என்னவென்று சொல்ல என் கேட்ட நேரத்தை.....!!