எங்கிருக்கிறாய் என் நண்பனே...???!!

நண்பனே.....
குரல் கேட்காமல் மனம் தவிக்கிறேன்.....
அழைத்த போதெல்லாம் அனுமதி இல்லை
இணைப்பு இல்லை என்றது இயந்திரக் குரல்..
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாயாம்...!
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
புறாக் கூண்டில் அடைபட்டது மனம்.....
முகம் காணாமல் அகம் தவிக்க
மொழி கேட்க வழி இல்லையா ஒரு கணம் ...
அலைஅலையாய் எண்ணங்களுடன்
தினம் ரணம்...
இன்னும் அலைபேசி அழைக்கவில்லை ...
நண்பனே.....
குரல் கேட்காமல் மனம் தவிக்கிறேன்.....

எழுதியவர் : sindhuma (20-Nov-12, 6:52 pm)
சேர்த்தது : sindhuma
பார்வை : 167

மேலே