மனசாட்சி
எனக்குள் ஒருவன்:
--------------------------
அவன்...நான் அழும் போது,
சிரிப்பான்,சிரிக்கும் போது,
அழுவான்...நான் சிரிக்கும் போது,
ஐயோ, நாளை என்ன நடக்குமோ,.
இன்று நிறைய சிரிக்கிறானே,என்று,
அழும் போது,...இதுக்குப் போய்
அழலாமா...........................என்ன
சிறுபிள்ளைத்தனமாய் என்று
நகைப்பான்.....
சினம் கொள்ளும் போதும்,
சிரிப்பான், இதென்ன
கையாலாகாத்தனம் என்று....
சண்டை போட்டால்,
வருத்தப் படுவான்...
ஐயோ, பாவம், நாளை,
என்னாகுமோ! இவனுக்கு என்று..
சற்றே மகிழ்ந்தால்,
அல்ப விஷயம்....இதற்கா,
இத்தனை, தாம், தூம், என்பான்...
வருத்தப் படும் போது,
இதெல்லாம்,கடந்து
போகும் மேகம் என்பான்...
இன்று இருக்கும் கவலை
நாளை இல்லை, இதே
விஷயத்திற்கு,என்பான்..
சோர்ந்து விட்டால்,
உற்சாகப் படுத்துவான்,
நிறைய விஷயங்களைத்
தேடி, நினைவுபடுத்தி,
நல்ல மனிதரை துணைக்கு
அழைத்து........
அதிகமாக ஆட்டம் போட்டால்,
அதட்டி உட்கார வைத்து விடுவான்,
அதிகமாக ஆடாதே என்று...
அவன்தான் என் மனசாட்சி....
அவனை கொன்று விட்டால்,
நானே, மனிதன் இல்லை....