நின் நினைவுகளின் நிழல்கள் - பகுதி 4

நின் எழில்நிறைந்த வளமதன்(நினைவு)
நிஜத்தின் நிழல்தனை பா(ர்)த்தேன் !
பார்த்த மாத்திரத்தினில்,எந்தன் பெரும்
பாறை மனம் பூத்தேன்

வளமைவாய்ந்த நின் எழில் வளமையதன்
வளமையின் செழுமைக்கோர்
சின்னஞ்சிறு உதாரணம் உரைக்கவா ?
உலகின் ,மிக வறுமை மிக்க நாடான
எத்தியோப்பியாவை சுத்தி வந்திடும் மொத்த வறுமையும்
தன் படை பரிவாரங்களுடன் , வாய்பொத்தி ஓரமாய்
சத்தியமாய் வெளியேறிடும் விரக்தியில்
இரு விழிகள் பொத்தியே !

*****************************************************************************************************
"அனுதினமும் ஓர் ஆப்பில் உட்கொண்டால்
மருத்துவரை விலக்கிடலாம் "
ஆங்கில பழமொழியின் உரைமொழி இது

நானோ , மருத்துவத்தையே விலக்கிவிட்டேன்
"அனுதினமும் நின் நினைவையே உட்கொண்டு "
*********************************************************************************************************
என் சிறைவாசம் அமைந்திருக்கும் சிறைகூடு
நீ சுவாசிக்கும் உன் சுவாசகூடல்லவா ?
சுதந்திரம் என்பது மனதை சார்ந்தது
மனதில் சுதந்திரம் நிறைந்திருக்கும்போது
தனியே சுதந்திரம் வெளியே தேடுவதில் உடன்பாடில்லை ,
ஆசை இல்லையா?
ஆசைக்கே ஆசை இல்லையா ?
யார் சொன்னது ?
ஆசையின் ஆசையை பட்டியலிட்டால்
பல விடியல் கழிந்துவிடும்
பட்டியல் படித்தும் முடியாமலே ..
என் நினைப்பு இல்லாதது எண்ணி அலுத்துகொண்டிருக்கின்றேன்
இழப்பு அதைவிட வேறென்ன இருக்கபோகிறது ?

******************************************************************************************
என் நினைவுகளின் நிராகரிப்பால்
துண்டாக்கப்பட்டு ரெண்டாக்கப்பட்ட உன் இதையத்தை
ஒன்றோடு ஒன்றாக ஒன்றாக்கி - உள்
உண்டாக்கப்பட்ட வலியை மட்டும் ரெண்டாக்கி - மலர்
செண்டான உன் மனதின் வலி குறைக்க .
ரெண்டான வலியின் இரு பகுதியில்
ஒன்றான பெரும்பகுதியை தான் கொண்டு -உன்னை
கொண்டாடவைக்க துடிக்கிறது ஓர் வண்டு ..எனினும்
செண்டான உன்னிடம் இருந்து அடி வாங்கவேண்டிருக்குமோ ?
எனும் திண்டாட்டமும் வண்டிற்கு நிறைய உண்டு.

*********************************************************************************************
இனியவளே !
உனக்கு வரன் ஆகும் அரும் வாய்ப்பு
கிட்டாவிட்டாலும் உன் இதயத்திற்கு
அரண் ஆகும் பெரும் பாக்கியம் போதும் .

எப்போது என் அன்பின் ,
என் ஆசையின் அரவணைப்பு போதாது
என தோன்றுகிறதோ, அன்றே சொல்
உன் இதயத்தை உன்னிடமே ஒப்படைத்து
உள்ளம் நிறைந்த உன் நினைவுகளோடு ,
உயிர் பிரிந்து செல்கிறேன்
உன் இதயம் பிரியும் துயர் தாளாது ......

*************************************************************************************************
நினைவுகள் பெருவாரியான பொழுதுகளில்
நிஜத்தை விஞ்சிவிடுகின்றது ,
தரும் இனிமைதனின் அளவினில்.

நிஜம் தரும் இனிமையோ சில நொடிகளில்
நினைவுகள் தரும் இனிமையோ நாம் நாடும் போதெல்லாம்
இனிமை சுகம் தேடும்போதெல்லாம்
(நின்)நினைவுகளை நீக்கி பார்த்தால்
(என்) கவிதை கடல் கடலில் இருந்து மருவி
சிறு ஓடையாய் தான் வீற்றிருக்கும் வறண்டு ...

*********************************************************************************************************

எழுதியவர் : aasaiajiith (25-Nov-12, 2:23 pm)
பார்வை : 149

மேலே