ஈசனுக்கு ஈரம் இருந்த்தால்.

ஈசனுக்கு ஈரம் இருந்த்தால்........................

செங்காந்தள் மலரே,

உனை சிதைத்தது யாரோ ?
ஈழத்தில் வாழ்ந்த எம் இதயத்தில் வாழும்
செங்காந்தள் மலரே,

நேசக் கரம் நீட்ட
முடியாதெனினும் பாசவலையில்
பட்டுவிட்டோம்
நாச வேலைசெய்து
பாசவலை யருத்தவர் யாரோ ?

மதியின் வதனமே !
உனை வதைத்தவர் நாசமாய் போகட்டும்.

குருதி ஈரம் காயும் முன்னே
குரல் ஒடுங்கி போனபின்னே

அரிந்து தள்ளிய ஆயிரம் தலைகளை
அள்ளித் தின்னும் சிகண்டி சிங்க
அளமே, சாவு உனை அள்ளாத ?
சாபம் உனை கிள்ளாதா ?

செங்காந்தள் மலரே,
நாம் உறவாட தேச இறையான்மை
தடுக்கும்.
உள்ளத்தின் நேசத்தை உலகோர் தடுக்குமோ ?
உள்ளம் பதைத்தது உ(ண்)மை அறிய
உம்மை யன்றி யார் சொல்வார்
உண்மையை !
ஊமையாய் விழிவைத்து
ஊனமாக்கி உரங்கவைத்தோம் உணர்வுகளை
உள்ளங்களை யல்ல.

ஈசனுக்கு ஈரம் இருந்த்தால்
ஈழத்தைக் காக்கட்டும்
- ச.முகுலீ

எழுதியவர் : ச.முகுலீ (25-Nov-12, 2:49 pm)
சேர்த்தது : sa.mukulee
பார்வை : 105

மேலே