மடி தாண்ட மாட்டேன் பெண்ணே...
கொஞ்சம்
மடி சாய்ந்து கொள்கிறேன்
துப்பட்டாவில்
என் முகம் மூடு
துணி மூடிய
நெற்றியில் முத்தமிடு
முகமெங்கிலும் தேவையெனினும்
உதடு தவிர்
உன் முகம் படரும் கூந்தலை
படரப் படர விலக்கு
சிறு புன்னகைக்கு
உதட்டினை அகலப்படுத்து
இமைகளால் விழிகளைப் பாதியாக்கி
கிறங்கு
நம் விரல்களைப்
பிண்ணலிடு
நுனி மூக்கை
அசை
மீசையை
முறுக்கி விடு
காதுகளைத்
திருகு
என் முடிகளை
சடையாக்கிப் பூச்சூட்டு
என் மார்பின் ரோமக்காட்டுக்குள்
உன் விரல்களால் எதையாவது தேடு
இனியும்
உன் மடி தாண்ட மாட்டேன் பெண்ணே....