பொன்னாத்தாவின் புலம்பல்...!

கழனியில வேல பாக்க
கலங்கி நின்னதில்ல
கட்டுக் கதிரு சுமந்தும்
நடக்க சிரமப்பட்டதில்ல
கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு
வயித்தில் ஒண்ணு
இருந்த போதும் கவலையில்ல
பத்துவீடு சுத்திவந்து
பத்துபாத்திரம் தேய்ப்பதில கூட
குறையுமில்ல...!

மூலையில கிடந்தாலும்
மூணுவேளை கஞ்சி ஊத்த
கஷ்டமில்ல
இரவு பகல் பாராம
மிருகமா என்னை வேட்டையாடி
கொன்னாலும் பரவாயில்லை
மொட்டையா போற மகன்
குடிச்சு குடிச்சு சீரழிஞ்சு
அவன் குடல கருக்கி எங்க உசிர
எடுக்காம இருந்தா சரிதேன்...!

கவுர்மெண்டே கட துறந்து
கருமாதி நடத்துதே....!
காந்தி போட்டோவ
காகிதத்தில் போட்டு வச்சு
கல்லாவுல சமாதியாக்கி
கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே!
கேக்க ஒரு நாதி இல்ல
என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல
எல்லா சாமிய கும்பிட்டும்
ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...!

எழுதியவர் : Dheva.S (27-Nov-12, 3:42 pm)
பார்வை : 144

மேலே