உன் இதயத்தில் எனக்கொரு இடம் வேண்டும் !

Give me some space for me to be safe,
Nowhere else, but in your tiny hearts,
I will make it as gorgeous as it should be,
I will keep it clean as the sky above the clouds,
Where stars and satellites have their routes,
Overhauling not needed as it will be maintained,
I may make it to run as fast as it can,
Without anything but my presence,
I may make it a pleasant place,
For the guests to arrive and enjoy,
I may make you all well kept,
The rest of your generations to loft,
Strip yourselves naked, leaving all tying,
Send the notes, scribbled with lying,
To be discarded to have the serenity,
Let us make love without fear and doubts,
Let us kiss, until our knees go strong,
Let us have babies that speak of wisdom,
The knowledge of modern human is in the rostrum.

நான் பத்திரமாக இருக்க இடம் வேண்டும்,
வேறெங்கும் இல்லை, உன் இதயத்தில்,
அதை எவ்வளவு அழகாக இருக்க வேண்டுமோ,
அவ்வளவு அழகாக்குவேன்.
மேகத்தின் மேலிருக்கும் வானத்தை,
போல சுத்தமாக்குவேன்,
அங்கே நட்சத்திரங்களும், கோள்களும்,
வரையறுக்கப்பட்ட பாதையில் சுற்றுகின்றன,
சரியாக பாதுகாக்கபடுவதால்,
மறு சீரமைப்பு தேவையில்லை.
இவைகளை வேகமாக சுற்ற வைக்க முடியும்,
மற்ற எதனாலும் அல்ல, என் வருகையில் தான்,
விருத்தினர் வந்து மகிழ்ந்து செல்லும் வகையில்,
இவ்விடத்தை இனிமையாக மாற்றுவேன்,
உன் தலை முறையினர் நிலையாக வாழ,
உன்னை நல்ல முறையில் வைப்பேன்,
உன்னை கட்டியிருக்கும் தத்துவங்களை,
கலைத்து விட்டு நிர்வாணமாகு,
பொய்கள் நிறைந்த பதிவுகளை,
தூக்கி எரிந்து விட்டு தூய்மையாகு,
எந்த கவலையோ, பயமோ இல்லாமல்,
நாம் புணர்வோம்.
நமது முட்டிகள் பலமாகும் வரை,
முத்தம் இடுவோம்,
விவேகத்தை பேசும் மழலைகளை,
பெறுவோம்,
நவீன மனித அறிவு மேடையில்,
வீற்றிருக்கின்றது.

குறிப்பு . இங்கே நான் என்பது அரசியல் நிலைத்தன்மையை குறிக்கின்றது.

வீரையா சுப்புலட்சுமி.

My poems are published in Poem Hunter.கம.

எழுதியவர் : (30-Nov-12, 8:51 am)
சேர்த்தது : Veeraiyah Subbulakshmi
பார்வை : 167

மேலே