தொழிலாளர்கள் அவலம்
இருண்ட காட்டிலே
ராட்சச சக்கரங்கள்
சுழன்று ஒளியை உமிழ்கிறது...
குடும்பம் குடும்பமாக பஞ்சத்தோடு
மக்கள் கல்லுடைத்து பாடுபட
வயிறு பிழைத்து, தேரும் திருநாளுமாம்!!
காட்டுக்குள் வலை வைத்துப் பிடித்து
இறைச்சியை அடுப்படியில்
தொங்கவிட்டு உண்டு வாழும் மனிதம் ...
உண்ண ஒன்றுமிராமல்
பட்டினி கிடக்கும்
பசியும் நோயும் அண்ட
குப்பைச் சக்தியின் வேர்களாம் ..
மலேரியாவிலும்
அறியாமை நோய்களிலும், சீழ் பிடித்து
நெளிந்த சமுதாயம்தான் இன்றும்..
ஆனால் ...
மனிதன் மனிதனாக
வாழப் பயில்வதே
முன்னேற்றமாம் சமுதாயத்திற்கு ...