எது துன்பம் ?

மனிதர்கள் ஓர் நூற்றாண்டு கூட வாழ்வதில்லை. எனினும் ஓராயிரம் ஆண்டு துன்பங்களுக்கும் இடம் கொடுக்கிறார்கள்.
-----சீனப் பழமொழி .
ஒரு தலைவன் வீட்டில் ...
பசு மாடு
ஈன்றது
கன்றதனை..

பெய்கிறது
கன மழை
ஓயாமல் ...

இடிந்து விட்டது
வீடு
தொடர் மழையால் ...

மனைவி
உடல்நலம் குன்றி
படுக்கையில் ...

இறந்துவிட்டார்
பணியாள்
உதவியில்லாமல்...

விதைக்கலாம்
விதை
ஈரம் உள்ளபோது
என்றெண்ணியபோது ...

கடன்காரர்
மறித்துக் கேட்கிறார்.
கொடுத்த பணத்தை ...

வீட்டிற்கு வருகிறார்
விருந்தினர்
தவிர்க்க இயலாமல் ...

கடித்து விட்டது
பாம்பு
அந்த தலைவனை ...

வருகின்றனர்
உறவினர்
இறப்புச் செய்தியுடன் ...

கேட்கின்றனர்
அரசு அதிகாரிகள்
நில வரியை ...

நிற்கிறார்
குருக்கள்
தட்சிணை எதிர்பார்த்து...

பிரச்சனைகளா?
நெளியும் புழுக்களா ?
புகை மண்டலங்களா ?
ஐயஹோ!!!

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா அ தவர்
என்கிறார் வள்ளுவர்.

கலங்காதார்
துன்பத்தைக்
கண்டு !

விளைவிப்பார்
துன்பம்
துன்பத்திற்கே !!

துன்பத்தை கண்டு துன்பத்திடம் கேள்!
துன்பம் தீரும் என்பதாம்

எழுதியவர் : செயா ரெத்தினம் (9-Dec-12, 9:28 pm)
பார்வை : 177

மேலே