ஒரு நாள் மட்டும்.... இவையெல்லாம் வேண்டும்

வானவில்லின் தேரேறி
வான் எங்கும் விஜயம் செய்து அதன்
வனப்பிலே மெய்சிலிர்த்து
வழி மறந்தே விட வேண்டும்

வெண்மேகமாய் உருண்டோடி
கடல் மேலே திரிந்திருந்து
கார்முகிலாய் உருமாறி
கலைந்தோடிட வேண்டும்

ஓரிடமும் நில்லாமல்
ஓடோடி நான் வந்து
மழைத்துளியாய் மாறியதும்
மண் மேலே விழுந்தாலும்

வேர் தேடி விரைந்தங்கே
வளமான விளைச்சலென ஊ
உயிர்சக்தி தெரித்திருக்கும்
பசுமையென மலர வேண்டும்

எழுதியவர் : (10-Dec-12, 2:22 pm)
சேர்த்தது : kanniammal
பார்வை : 99

மேலே