இது கூட கவிதைதான்

கவி எழுத நினைத்தேன்
காற்றாற்று வெள்ளமென
வார்த்தைகள் வரவில்லை !

கதை எழுத ஆசைப்பட்டேன்
மூளையை கசக்கி பார்த்தேன்
கடுகளவும்
கற்பனை உதிக்கவில்லை !

ஓவியம் தீட்டலாமா
ஒன்றும் புலப்படலே !
அமுதகானம் பாடலாமா
அதுவும் முடியாது
என்னவந்தது எனக்கு ?
ஏன் எந்த தடுமாற்றம்

தாறுமாறான விலைவாசி
தாரத்தின் சண்டை
குழந்தைகளின் கோபம்
தாயாரின் சோகம்
இதுவா காரணம்
என் எழுத்து தடுமாற

கவி எழுத முடியாதோ ?
இனி
கற்பனைதான் உதிக்காதோ ?

யோசித்தேன் !
இதையே வார்த்தையாய்
வடித்தேன்
அட ! இதுகூட கவிதைதான்

எழுதியவர் : (12-Dec-12, 9:21 am)
சேர்த்தது : m arun
பார்வை : 107

மேலே