முப்பொழுதும் என் கள்வனுடனே ...!
என் கள்வனே என்னை களவுகொண்டாய்
நானும் விரும்பியே களவு கொடுத்தேன்
இருபொழுதுகளும் இனிமையானது
எங்கும் எப்போதும் எதையோ
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்...
கண் விழித்தே கனா காண்கிறேன்
கண் இமைத்தால் கலைந்துவிடுமோ கனா என
கண் இமைக்காமல் கனா காண்கிறேன்...
நித்தம் நித்தம் நித்திரையில் இம்சித்தை நீ
எனினும் நித்திரை கொள்ளாமல்
கனா காண்கிறேன்...
எப்பொழுதும் உன்னுடன்
எப்பொழுதும் உன்னுடன்
என எண்ணி எண்ணி கனா காண்கிறேன்...
ஊடல் கலந்திட...
நாட்கள் நகற்ந்திட...
காதல் கனிந்திட..
காலம் கரைந்திட...
உடல் மெலிந்தாலும்...
நரை விழுந்தாலும்...
என் இறுதி நாள்வரை
ஒவ்வொரு மணிதுளியும்
என் கள்வன் உன்னோடு
இருப்பது போல்
கனா காண்கிறேன்...!