எதிரியை கண்டு கொள்..!

எப்போதும்
தப்பாமல் தூபம் போடுபவரா..?
நீ என்ன செய்தாலும்
சரியென்று சான்று தருபவரா..?
உனக்கே தவறெனப் படும் போதும்
அதை வழி மொழிபவரா..?
உன் குற்றங்கள் கண்டும்
குறை சொல்லாதவரா...?
இன்பத்தில் பங்கெடுக்க மட்டும்
ஆர்வம் மிக்கவரா..?
துன்பத்தில் பங்கெடுக்க
சாக்கு போக்கு சொல்பவரா..?
அக்கறை என்ற பெயரில்
சர்க்கரை போல் இனிப்பவரா..?
உன் சக நண்பர்களிடம்
உன்னை தோலுரிப்பவரா..?
உன் வளர்ச்சியை
வாயால் மட்டும் வாழ்த்துபவரா..?
நன்மை பயக்காத காரியங்களில்
உன் நம்பிக்கையை வளர்ப்பவரா..?
நன்மை பயக்கும் காரியங்களில்
உன் நம்பிக்கையை தகர்ப்பவரா..?
சுயநலப் பேயாய்
சுற்றிச் சுற்றி வருபவரா..?
புறம் பேசுவதையே
அறமாகக் கொண்டவரா..?
உதட்டுச் சிரிப்பை உதிர்த்து
உள்ளக் கனலை உமிழ்பவரா..?
இவர்களெல்லாம்
இவர்கள் போன்றவர்கள் எல்லாம்
நிச்சயம் எதிரிகள் கண்டு கொள்.!