பாட்டிக்கு

என் பாட்டிக்கு

என் மழலை பருவத்தில்
என்னை தாலாட்டி
கதைகள் சொல்லி
நம்பிக் கை அளித்து
உறவுகள் வலிமை
உணர செய்து
விடுமுறை நாட்களை
இன்றும் எண்ணி பார்க்கும்
அளவில் உயிர் ஓவியமாய்
மாற்றி அமைத்து
குடும்பமாய் உன்னோடு
கழித்த நாட்கள்
யாவும் இனிமை
நீ விண் உலகிற்கு சென்று
பன்னிரண்டு ஆண்டுகள் சென்றாலும்
வாழ்கிறாய் எங்களோடு
என்றும் உன் ஆன்மா வாக
உன் பாசம் விலைமதிப்பற்றது
உன் தியாகம் என்னில் அடங்கா
உன் ஆசிர்வாதம் என்றும்
எங்களை வாழ வைக்கும்

ஸ்ரீ தேவி சரவணபெருமாள்

எழுதியவர் : ஸ்ரீ தேவி சரவணபெருமாள் (20-Dec-12, 8:25 am)
பார்வை : 116

மேலே