சம்பள நாள்

ஒன்றாம் தேதியில்
ஊதியம் வரும்! மனம்
இரண்டும் ஒன்றானால்
இன்பம் வரும்!
முக்கனிச் சாற்றின்
மணமும் வரும்!
மூவகைத் தமிழின்
குணமும் வரும்!
நான்காம் நாளில்
நகர்வலம் வரும்!
ஐவகைக் கறிகளும்
உடனே வரும்!
அறுசுவை உணவின்
ஆசை வரும்!
ஏழாம் நாளில்
எல்லாம் வரும்!
ஏழு சுரங்களில்
பாட்டு வரும்!
எட்டாம் நாளில்
ஏக்கம் வரும்!
ஒன்பதாம் நாளில்
ஒழுக்கம் கெடும்!
பத்தாம் நாளில்
பஞ்சம் வரும்!
பசியும் பட்டினியும்
உள்ளே வரும்!
சண்டையும் சச்சரவும்
உடனே வரும்!
எஞ்சிய நாட்களின்
நினைவு வரும்!
ஏக்கப் பெருமூச்சும்
எழுந்து வரும்!
ஒன்றாம் நாளை
எதிர்பார்க்கும்! மனம்
ஒன்றிப் போவதை
எதிர் நோக்கும்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (20-Dec-12, 8:46 am)
பார்வை : 296

மேலே