காத்துகொண்டே இருக்கிறன் .....
வாழ ஆசை- என்
வாழ்க்கை உன்னோடு என்றால் ,
சாக ஆசை -என்
மரணம் உன் மடியில் என்றால் ,
சிரிக்க ஆசை அதை -நீ
ரசிப்பாய் என்றால் ,
காதலிக்க ஆசை -என்
காதலன் நீ என்றால்,
ஒவ்வொரு நொடியும்
உனக்காக வாழ துடிக்கிறேன்,
ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்து தவிக்கின்றேன்,
காதலா! கண் இமைக்காமல்
பார்க்கும் என்னை
ஒரு முறையாவது பார்த்து செல் ...
உன் பார்வைக்காக
காத்துகொண்டே இருக்கிறேன் ....