சுனாமியே !
எரிமலை நடுவினில் நீ பிறந்து
இயற்கையின் கடலின் தொடை கிழிந்து
உதிரங்கள் அலையென நீ உயர்ந்து கிலியால்
உறைகின்ற மக்களில் நீ இறந்து
சவமென குவியலாய் நீ மிதந்து
சரித்திரமாய் இருக்கிறாய் சுனாமியென்று
வன்னி காடென்னும் அழிவினில் நீ பிறந்து
வல்லரசு நாடென்னும் போதையில் தொடை கிழிந்து
இரத்தமென்றும் சுத்தமென்று நீ உயர்ந்து
இறக்கின்ற மனிதநேயத்தில் நீ கிடந்து
ஈழமெனும் விடுதலையில் நீ மிதந்து
இலங்கைக்கு சுனாமியென்று இருந்திடுவாய்