அழுக்கு அழகிகள்
கருமையின்
அழகுகள்...!
அழுக்கிகள் ..!
தங்களையே
மாசுபடுத்தி
ஊரைத் தூய்மையாக்கும்
மண்ணில் அலையும்
உத்தமர்கள் !(பன்றி )
சில சூழ்ச்சியாளர்களோடு
ஒப்பிடப் படுவதால்
அவைகள்
அவமானப் பட்டு
வருந்தும்
அப்பிராணிகள் !
வெள்ளை நிறம்
கருப்பு நிறம் என
பேதங்கள்
இவற்றில்
ஆதிக்கம் செய்யும்
அதிகாரம் இல்லை
இவைகளிடம் ..!