அவ்விடம் தேடி
சின்ன குயில் இசைகள்
ரசித்திட வேண்டும்
அழகு மயில் நடனம்
அதை கண்டிட வேண்டும்
முயல் அதனை பிடித்து
விளையாடிட வேண்டும்
துள்ளி ஓடும் மானை
கையில் பிடித்திட வேண்டும்
அசைந்து வரும் யானை
அழகினை கண்டிடவேண்டும்
பாசாங்கில்லாத பச்சைக்கிளிகள் போல்
நானும் பறந்திட வேண்டும்
இல்லையேல் ஒரு பட்டாம்புச்சி
போலாவது இருந்திட வேண்டும்
இயற்கை அழகினை
ரசித்திட வேண்டும்
இன்னிசை நாத ஒலி
கேட்டிட வேண்டும்
மனித இனம் இல்லாத
இடமாக வேண்டும்
அழகான அவ்விடம் தேடி
அங்கு - நான்
வசித்திட வேண்டும்