உனக்காக காத்திருந்த மழை நாள்.
நீர் உஞ்சலை ரசித்த படி
காத்திருத்தல் சுகமென்று
உணர்த்தியது
மழை கொண்டு வந்த குளிர்
நனைந்த படி விழிகள்
அலைந்தன தெருமுனை எங்கும்
அவசியம் வருவதாக கூறி
அலைக்கழிப்பதும்
பின் சாட்டுப்போக்கு சொல்லி
சமாளிப்பதும் உனக்கு
பொழுது போக்காகவே போயிற்று
இன்று அதிக பட்ச அவஸ்த்தை
அனுபவித்ததுபோல் மனசு
இனிமேல் குடையுடன்
வருவதான யோசனையோடு
விடைபெறுகிறேன்.
நீ யாருக்காக காத்திருக்கிறாயோ?
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.