நட்பு வெடி !
ஓணான் ஒன்று பிடித்து வந்து அதன்
உடலெங்கும் வெடிகள் கட்டி
தற்கொலை தீவிரவாதியென்று
தத்வரூபமாய் வெடிக்க வைத்தோம்
நாய் சிலதை பிடித்து வந்து
நண்பர்களோடு சேர்ந்திருந்து
வாலில்தான் சரவெடியை
வைத்து நாங்கள் கொளுத்தினோம்
கொட்டங்குச்சி குவித்து வைத்து
குண்டு வெடியை அதில் வைத்து
கும்மாளமாய் சிரித்திருந்தோம்
கூட்டமான நண்பர்களோடு
ஊசி வெடியை கையில் வைத்து
உறவு பெண்ணின் முன் நின்று
வீசி வீசி வேடிதிருந்தோம்
வீரமாக அவள் முன் நின்றோம்
நண்டு வளையில் பூண்டு வெடியை
நான்கு மூன்றை போட்டுவைத்து
சிதறி விழும் சின்ன கால்களை
சிந்திக்காமல் சிரித்திருந்தோம்
கம்பு கொல்லையில் காக்காய் ஓட்ட
கரிசனமாய் சென்றிடுவோம்
நரியினை நாங்கள் பார்த்திருந்தால்
நாலு பாய்ச்சலில் வீடு வர
தினம் தினமாய் தீபாவளி
திருவிழாவில் வெடி வைத்து
பெரிசுகளின் தொல்லைகளை
பிரமதாமாய் சமாளிப்போம்
பக்கத்துக்கு வீட்டு கூரைகளில்
பகையெனத்தான் வெடியை விட்டு
புகையும் போது போய்சென்று
புதிய நட்பாய் அணைத்திடுவோம்
இந்த தீபாவளில் எல்லா தவறுக்கும்
இனிய வெடியை கொளுத்தி
இயன்ற வரையில் சிரித்திடுவோம்
எனதருமை நண்பர்களே !