ஓ சுனாமியே ....!

ஓ சுனாமியே ....!

பூமித்தகட்டின்
பொருமல்களால்
அழுத்தம் குடித்து
நீலக்கடலில்
நீந்திவந்த நீரரக்கன் !
சுனாமி - எனும்
பேயரக்கன் !
பேரரக்கன் !

எம் எதிரிகள் கூட
அறிவிக்காமல் - எங்களை
தாக்குவதில்லை ..!
பனையுயர
உயிர் பறிக்கும்
தண்ணீர் துப்பாக்கிகள்,
தும்மிவிடவும் இல்லை
தாக்குதலுக்கு முன் !


நீவிர் நீராய் மாறி
எம்மை எமலோகம் அனுப்பும்
திட்டம் தெரிந்திருப்பின்
ஹைட்ரோஜென் - ஆக்சிஜன் கூட
மலடாய் மாறி
கருப்பையை உன் கல்லறையாய்
செதுக்கி இருக்கும் செவ்வனே ..!

பூமித்தாயே.....
நீயே
மாற்றான் தாயாய் மாறி
சிலரை மட்டும்
சின்னாபின்னமாக்குவது
எங்கனம் நியாயம் !
எங்கள் தாயேனும்
விளித்தலுக்கு
தகுந்தவளா நீ ?

செரிமான திரவம்
சென்று போய்
தின்று செரித்த
வடுக்களாய் இருந்தது
நாகையில் - நீ
நடந்து போனத் தெருக்கள் !

மண் தூற்றுவோர்
மத்தியில் - நீயோ
கருமண்ணை கரைத்து
ஊற்றிவிட்டு போகிறாய்
உன்னில் கரைத்து !

உருக்குலைப்பது
உன் - குல
வழக்கமாய் இருக்கலாம்..... !
கருக்கலைப்பே பாவமென
பார்க்கும் எங்களின்
உயிர் பறிக்கும் போது
உன் இதயம்
உன்னோடும்
உயிரோடும் இருந்ததா ?

குட்டித்தீவுகளின்
குரல்வளை கடித்து,
இதயம் கிழித்து,
உயிரை உறிஞ்சும்
உனக்கு பெயர்தான்
கடல் மாதாவா ?

ஓ கடவுளே ......
உன் கையறு நிலை கண்டு
வெட்கப்படுகிறேன்.....!
உன் கையாலேயே அகாதெனின்
எத்தகைய கையாலாகாதனமது !

அரசியல்வாதிகளை
மட்டும் தாக்கும் - நோயொன்று
கண்டு பிடிக்கா முடியா உனக்கு,
தீவிரவாதிகள் உயிர் குடிக்கும்
துப்பில்லா உனக்கு,
சிங்கள நாய்களின் சிரம் சாய்க்க
வக்கில்லா உனக்கு ....
எங்களின் அர்ச்சனைகளும்
ஆராதனைகளும் அவசியமா ?

எங்களை காத்தருள்
முடியாதெனில்
முடிந்த மட்டும் கொல்லாதிரு....
அதுவும் முடியாதெனில்...
எங்களை உயிர்பிக்காதே....
உன் அழுக்கு
பூமியில் வாழ்வதைவிட
என் தாயின்
கருப்பையில் சாவதே மேல்..... !

நீர் தாயே....
தாய்மையின்
தன்மையில்- நீ
நீர்த்தாயே !

( சுனாமி தமிழகத்தின் கடலோர எல்லைகளை காவு வாங்கிய எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று...! தண்ணீர் தின்ற உயிர்களுக்காக பிரார்த்திப்போம், மீண்டும் ஒருமுறை ! இது ஒரு மீள்பதிவு )

எழுதியவர் : வினோதன் (26-Dec-12, 1:24 am)
பார்வை : 97

மேலே